செய்திகள்
காரையூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
காரையூரில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட துணை செய லாளர்சின்னையா, பொதுக் குழுஉறுப்பினர் தென்ன ரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் லியோனி சிறப்புரையாற்றினார்.
இதில் நகரச்செயலாளர் அழகப்பன், மாவட்டப் பிரதிநிதிகள் சிக்கந்தர், விஜயன், துணைச்செயலாளர்கள் திலகவதி முருகேசன், கண்ணன், பாஸ்கரன், முன்னாள் ஒன்றியச்செயலாளர் நாகராஜன், ஒன்றிய அவைத்த லைவர் மீராகனி, நிர்வாகிகள் கணேசமூர்த்தி, முரளிதரன், மணிமாறன், திருப்பதி, சின்னையா, அண்ணாத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட பிரதிநிதி தவசுமணி வரவேற்று பேசினார். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதிதாசன் நன்றி கூறினார். தொடக்கத்தில் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ராஜீவின் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.