செய்திகள்

மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்

Published On 2018-06-28 10:06 GMT   |   Update On 2018-06-28 10:06 GMT
5 ஆண்டு சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் இதன் கீழ் செயல்படும் அரசு சட்ட கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டபடிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியலை http://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விரைவில் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 
Tags:    

Similar News