செய்திகள்

பொள்ளாச்சி நிதி நிறுவன அதிபர் கொலையில் நண்பர்களிடம் போலீஸ் விசாரணை

Published On 2018-06-12 16:04 IST   |   Update On 2018-06-12 16:04:00 IST
பொள்ளாச்சியில் நிதி நிறுவன அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (47). நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து சென்ற கந்தசாமி பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பொள்ளாச்சியை அடுத்துள்ள சிங்காநல்லூர் நீரேற்று நிலையம் அருகே உள்ள முட் புதரில் தலையில் பலத்த காயத்துடன் கந்தசாமி பிணமாக கிடந்தார்.

அவரை யாரோ மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து பிணத்தை புதருக்குள் வீசி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

கொலையாளிகளை பிடிக்க வால்பாறை டி.எஸ்.பி. சுப்பிரமணியம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் அம்மாத்துரை மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர். இந்த தனிப்படையினர் கந்தசாமியை கடத்தி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கந்தசாமியின் உறவினர்கள், நண்பர்கள், தொழில் ரீதியாக தொடர்பில் உள்ளவர்கள் என பலரிடம் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

கந்தசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை கொலையாளிகள் எடுத்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. #Tamilnews
Tags:    

Similar News