செய்திகள்

காலா படத்தை தடுப்பவர்களை அரசு ஒடுக்க வேண்டும்- இல.கணேசன் எம்.பி.

Published On 2018-06-08 13:16 IST   |   Update On 2018-06-08 13:16:00 IST
காலா படத்தை திரையிட விடாமல் தடுப்பவர்களை அரசு ஒடுக்க வேண்டும் என்று தஞ்சையில் பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் தெரிவித்தார். #BJP #LaGanesan #Kaala
தஞ்சாவூர்:

தஞ்சையில் பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இளைஞர்கள் சமுதாயம் ஆண்டவன் தந்த உயிரை தாங்களே மாய்த்து கொள்ள உரிமை கிடைக்காது. எந்த காரியத்திலும் இறுதிவரை போராட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதுதொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். எந்த பிரச்சனை என்றாலும் அதனை எதிர்கொண்டு தைரியமாக போராட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. போராட சென்றவர்களும், போராட்ட குழுவை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் போராட்டம் நடந்த வழியில் சென்றவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் நிவாரணம் வழங்கி வாழ்வாதாரத்துக்கு அரசு உதவ வேண்டும். போராட்டத்தை தூண்டி விட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கர்நாடகாவில் ரஜினியின் ‘காலா’ படத்தை வெளியிட காழ்ப்புணர்ச்சி காரணமாக மறுக்கின்றனர். கலை பிரிவினர் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டக் கூடாது. காலா படத்தை திரையிட விடாமல் தடுப்பவர்களை அரசு ஒடுக்க வேண்டும்.

வருகிற ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan #Kaala
Tags:    

Similar News