செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரியவருக்கு ரூ.50,000 அபராதம்- ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-06-07 12:42 GMT   |   Update On 2018-06-07 12:42 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் வழக்கை தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. #Jayalalithaa #highcourt
சென்னை:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் ஜெயலலிதா இறப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் தேவையில்லாமல் வழக்கு தொடர்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதமாக ரூ.50 ஆயிரத்தை மாநில சட்டப்பணிகள் குழு ஆணையத்திற்கு வழங்க உத்தரவிட்டு மனுவை தள்ளுப்படி செய்தனர். #Jayalalithaa #highcourt
Tags:    

Similar News