செய்திகள்

கர்நாடகாவில் காலா படத்தை தடை செய்யக்கூடாது- திருமாவளவன்

Published On 2018-06-06 06:51 GMT   |   Update On 2018-06-06 06:55 GMT
கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளனர். #Kaala #viduthalaisiruthaigalkatchi #thirumavalavan
சென்னை:

கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக திருமாவளவன் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என அங்குள்ள சில இனவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழக மக்களின் கருத்துக்களையே பிரதிபலித்தார். அது கர்நாடகாவிற்கு எதிரானது என்று அவரது திரைப்படத்திற்கு கன்னடர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கன்னடர்களின் இந்த போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

இனவாத அடிப்படையில் மட்டுமே ரஜினி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் திரை துறையினர் பாதிக்கப்படுவார்கள். எனவே கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இதுபோன்ற இனவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும். அது திரைப்பட எதிர்ப்பாக மட்டும் இல்லாமல், தமிழர் விரோத போக்காகவும் வன்முறையாகவும் மாறும். எனவே கர்நாடக அரசு காலா திரைப்படம் வெளியாவதற்கும் அந்த திரைப்படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.



2 மாநிலங்களை சேர்ந்த தயாரிப்பாளர், வெளியீட்டாளர்கள் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண வேண்டும். ரஜினியோடு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்பதை ஏற்க இயலாது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான போக்காகும்.

காலா திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை சில இனவாத அமைப்புகள் சீண்டுவதை அனுமதிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #Kaala #viduthalaisiruthaigalkatchi #thirumavalavan
Tags:    

Similar News