செய்திகள்

நீட் தேர்வில் தோல்வி - விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை

Published On 2018-06-04 23:57 IST   |   Update On 2018-06-05 00:19:00 IST
நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். #NEET2018 #Pratheeba TNStudentSuicide

விழுப்புரம்:

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் என்ற தளத்தில் சி.பி.எஸ்.இ. வெளியிடப்பட்டது. 

தமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் இவர் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.  

இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவள்ளூரை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார். #NEET2018 #Pratheeba TNStudentSuicide
Tags:    

Similar News