செய்திகள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

Published On 2018-05-30 03:42 GMT   |   Update On 2018-05-30 03:42 GMT
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். #TNHSCResult #PlusOneResult2018
சென்னை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக இந்த ஆண்டு பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.

மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.

விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்ததையடுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.



மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 91.3 சதவீதம். மாணவிகள் 94.6 சதவீதமும், மாணவர்கள் 87.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனனர். #TNHSCResult #PlusOneResult2018

Tags:    

Similar News