செய்திகள்

கொடைக்கானல் பகுதியில் 4 மணி நேரம் பலத்த மழை

Published On 2018-05-29 04:39 GMT   |   Update On 2018-05-29 04:39 GMT
கொடைக்கானல் பகுதியில் 4 மணி நேரம் பலத்த மழை பெய்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெருமாள்மலை:

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது இதமான சீசன் நிலவி வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கொடைக்கானலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அங்குள்ள அழகினை ரசித்து தங்களது செல்போன்களில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.

நேற்றுடன் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய கோடை விழா முடிவடைந்தது. ஆனாலும் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாலை நேரம் ஆனால் போதும் கரு மேகங்கள் சூழ்ந்து சிறிது நேரத்தில் மழை கொட்டித் தீர்த்து விடுகிறது.

நேற்று மாலையில் கன மழை பெய்தது. சுமார் 4 மணி நேரம் பெய்த மழையினால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பள்ளங்கி, வில்பட்டி, பாம்பார்புரம், செண்பகனூர், பெருமாள்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேல்மலை கிராமங்களில் புதிதாக அருவிகள் உருவாகியுள்ளது. இதனை பார்ப்பவர்களுக்கு ரம்யமாக காட்சியளிக்கிறது. இந்த தண்ணீர் நீர் நிலைகளில் தேங்குவதால் விவசாயிகளும் தங்களது பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags:    

Similar News