செய்திகள்

காரைக்குடியில் கனமழை - குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-05-26 04:41 GMT   |   Update On 2018-05-26 04:41 GMT
காரைக்குடியில் பெய்த கனமழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #rain

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

நேற்றும், நேற்று முன் தினமும் சிவகங்கை, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை காரணமாக கோடை உழவுப் பணியை தொடங்குவதில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருப்புவனம்- 62.6

சிவகங்கை- 57.5

திருப்பத்தூர்- 51.3

மானாமதுரை- 34.4

தேவகோட்டை- 33.4

காளையார்கோவில்- 11.6

மதுரை மாவட்டம் மேலூரிலும் இடி-மின்னலு டன் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 57 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. #rain

Tags:    

Similar News