சீனாவில் மீண்டும் குறைந்த பிறப்பு விகிதம்: கடந்த ஆண்டைவிட 17% குறைவு
- 2025-ல் 7.92 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. இது கடந்த 2024-ம் ஆண்டை விட 1.62 மில்லியன் குறைந்துள்ளது.
- 2024-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு சீனாவில் மக்கள் தொகையில் 3 மில்லியன் குறைந்துள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. குழந்தை பிறப்பு விகிதம் குறிப்பிட்ட வகையில் குறைந்துவ வந்ததால், ஒரு தம்பதி ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கியது.
கடந்த 2015-ம் ஆண்டு இந்த நடவடிக்கையை நீக்கி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது. என்றாலும் சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. இதனால் இரண்டு குழந்தைகள் பெற்றக்கொள்ளும் தம்பதிக்கு அரசு சலுகைகள் வழங்கும் எனவும் தெரிவித்தது. அதற்கு பலனில்லை.
இதன்காரணமாக, கடந்த 2023-ம் ஆண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு பட்டியலில் இந்தியாவைவிட பின்தங்கியது.
கடந்த 2024-ம் ஆண்டு பிறப்பு விகிதம் சற்று அதிகரித்தது. ஆனால் கடந்த 2025-ம் ஆண்டு முந்தைய ஆண்டைவிட 17 சதவிதம் குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. 2025-ல் 7.92 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. இது கடந்த 2024-ம் ஆண்டை விட 1.62 மில்லியன் குறைந்துள்ளது.
2024-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு சீனாவில் மக்கள் தொகையில் 3 மில்லியன் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கணக்கீட்டின்படி சீனாவில் மக்களை தொகை 1.404 பில்லியன் ஆகும்.