செய்திகள்

உசிலம்பட்டி அருகே கிணற்றில் மிதந்த சிறுவன் உடல்: போலீசார் விசாரணை

Published On 2018-05-25 17:57 IST   |   Update On 2018-05-25 17:57:00 IST
உசிலம்பட்டி அருகே கிணற்றில் மிதந்த சிறுவன் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியைச் சேர்ந்த ஒச்சு என்பவரின் தோட்டத்து கிணற்றில் சிறுவன் ஒருவன் பிணமாக கிடந்தான்.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த சிறுவனின் பெயர் சஞ்சய் (வயது 17) என்றும், அழகுமலை என்பவரின் மகன் என்பதும் தெரியவந்தது.

சஞ்சய்க்கு நீண்ட நாட்களாகவே காக்கா வலிப்பு நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் கிணற்றில் குளித்த போது நோய் பாதிப்பு காரணமாக இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

இருந்த போதிலும் சஞ்சய் மரணத்துக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News