செய்திகள்

தூத்துக்குடியில் டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுகள் மற்றும் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

Published On 2018-05-23 19:50 IST   |   Update On 2018-05-23 19:50:00 IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் நாளை நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுகள் மற்றும் மனோன்மனியம் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #SterliteProtest
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி துறை ரீதியிலான தேர்வு நாளை தொடங்கி 31-ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதே போல, மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகளும் நடக்க உள்ளது. கலவர சூழலை அடுத்து, இரு தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 
Tags:    

Similar News