செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வு - 9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர்

Published On 2018-05-23 09:27 GMT   |   Update On 2018-05-23 09:27 GMT
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று முத்திரை பதித்து உள்ளனர்.
சென்னை:

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அறிவியல் பாடத்தில் தான் அதிகமான தேர்ச்சி இருந்தது. இந்த பாடத்தில் 98.47 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதற்கு அடுத்தப்படியாக சமூக அறிவியலில் 96.75 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் வருமாறு:-

1. மொழிப் பாடம்- 96.42
2. ஆங்கிலம்- 96.50
3. கணிதம்- 96.18
4. அறிவியல்- 98.47
5. சமூக அறிவியல்-96.75

9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் (மொத்த மார்க் 500) பெற்று முத்திரை பதித்து உள்ளனர். இதில் 6607 பேர் மாணவிகள். மீதியுள்ள 2795 பேர் மாணவர்கள் ஆவார்கள்.

451-480 மார்க் வரை 56,837 பேரும், 426-450 மதிப்பெண் வரை 64,144 பேரும், 401-425 மார்க் வரை 76,413 மாணவ-மாணவிகளும் பெற்றுள்ளனர். 301-400 மதிப்பெண் வரை 3 லட்சத்து 66 ஆயிரத்து 84 பேர் பெற்று உள்ளனர்.
Tags:    

Similar News