செய்திகள்

வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

Published On 2018-05-21 16:49 IST   |   Update On 2018-05-21 16:49:00 IST
வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

வாடிப்பட்டி:

மதுரை கோச்சடை முத்தையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சண்முகநாதன் (வயது 24). இவர் சமயநல்லூர் அருகே பரவையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

திண்டுக்கல்-திருமங்கலம் சாலையில் வைகை ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்தது. திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடியது.

அப்போது சண்முகநாதன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சண்முகநாதன் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News