செய்திகள்

ஊட்டி மலையில் மழை - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-05-17 10:45 GMT   |   Update On 2018-05-17 10:45 GMT
ஊட்டி மலை பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு:

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் 4 அடியிலிருந்து 5 அடி வரை குறைந்தது.

இதற்கிடையே நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததையொட்டி அணைக்கு கணிசமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்று குறைந்து வினாடிக்கு 400 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலை பகுதியில் மழை பெய்தது. இதையொட்டி அணைக்கு நீர் வரத்து இன்று அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1244 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிக்கிறது. அணையின் நீர்மட்டம் 48.69 அடியாக உள்ளது.

குடிநீருக்கு பவானி ஆற்றுக்கு 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நீர்பிடிப்பு பகுதியில் இதே போல் தொடர்ந்து மழை பெய்தால் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News