செய்திகள்

குன்றத்தூர் அருகே அனுமதியில்லாமல் வைத்த அம்பேத்கார் சிலை அகற்றம்

Published On 2018-05-15 13:47 IST   |   Update On 2018-05-15 13:47:00 IST
குன்றத்தூர் அருகே அனுமதியில்லாமல் வைத்த அம்பேத்கர் சிலையை அகற்றியது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள நூலகம் அருகே காலி இடத்தில் கடந்த 12-ந் தேதி மார்பளவு அம்பேத்கார் சிலை, அதே பகுதியை சேர்ந்த அம்பேத்கார் பொது நல சங்கம் சார்பில் வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து குன்றத்தூர் வருவாய் அதிகாரி இந்திராணி, அம்பேத்கார் சிலையை அகற்ற வேண்டும் என்று அம்பேத்கார் பொது நல மன்ற நிர்வாகிகளிடம் கூறி இருந்தார். ஆனால் அம்பேத்கார் சிலை அகற்றப்படவில்லை.

இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரி இந்திராணி, பல்லாவரம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவுப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் அதிகாரிகள் திருமுடிவாக்கத்துக்கு வந்தனர்.

அவர்கள் அம்பேத்கார் சிலையை அகற்றினர். பின்னர் பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்று விட்டனர். அம்பேத்கார் சிலை அகற்றப்பட்டது பற்றி அறிந்ததும் அம்பேத்கார் பொது நல மன்றத்தினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

உதவி கமி‌ஷனர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews
Tags:    

Similar News