செய்திகள்

காவிரி விவகாரத்தில் நாளை தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

Published On 2018-05-15 02:03 IST   |   Update On 2018-05-15 02:03:00 IST
“காவிரி விவகாரத்தில் நாளை தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்” என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #Cauvery #EdappadiPalanisamy
சேலம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து திருப்பதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

“காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்து இருக்கிறது. அதில் மத்திய அரசு சில யோசனைகள் அடிப்படையில் கருத்து தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கையின்படி நாளை (புதன் கிழமை) தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டத்தின் மூலமாக சுப்ரீம் கோர்ட்டை அணுகியதால் இறுதி தீர்ப்பு வழங்கக்கூடிய நிலை வந்துள்ளது. இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். தமிழக அரசை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பது தான் கோரிக்கையாக உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #EdappadiPalanisamy

Tags:    

Similar News