செய்திகள்

பாலவாக்கத்தில் உள்ள மலையேற்ற பயிற்சியாளர் வீட்டில் போலீஸ் அதிரடி விசாரணை

Published On 2018-03-12 15:00 IST   |   Update On 2018-03-12 15:00:00 IST
பாலவாக்கத்தில் உள்ள மலையேற்ற பயிற்சியாளர் வீட்டில் போலீசார் இன்று காலையில் அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

திருவான்மியூர்:

சென்னையில் இருந்து மாணவிகளை மலையேற்ற பயிற்சிக்கு அனுப்பி வைத்தது யார்? என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவரே இங்கிருந்து மலையேற்ற பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி தகவல் தெரிய வந்ததும் பாலவாக்கம் வி.ஜி.பி. அவென்யூ 2-வது குறுக்கு தெருவில் உள்ள பீட்டரின் வீட்டில் போலீசார் இன்று காலையில் அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பீட்டர் ஏற்கனவே வீட்டை காலி செய்து இருப்பது தெரிய வந்தது.

எனவே பீட்டர் பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews

Similar News