செய்திகள்

நாகை அருங்காட்சியகத்தில் புராதன சின்னங்கள்: கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

Published On 2018-02-03 17:18 IST   |   Update On 2018-02-03 17:19:00 IST
நாகப்பட்டினம் முதற் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் முதற் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் 1999-ம் வருடத்தில் தொடங்கப்பட்டது. இங்கு தொல்லியல் சின்னங்கள், கற்சிற்பங்கள், மானிடவியல், விலங்கியல், தாவரவியல், நாணயங்கள், ஓவியங்கள் தபால் தலைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இங்கு மாதந்தோறும் சிறப்பு கண்காட்சிகள், போட்டிகள், சொற் பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச அனுமதியும், ஏனைய பார்வையாளர்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இங்கு நாகை மாவட்டத்தில் கிடைத்த புராதன சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வடக்குப்பொய்கை நல்லூரில் கிடைத்த திமிங்கலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அழிந்து போன புதுவெளிக்கோபுரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

காட்சிக்கூடத்தின் பராமரிப்பு பணி பற்றியும், புதிதாக இடம் தேர்வு செய்வது குறித்தும் துறைசார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின் போது அருங்காட்சியககாப் பாட்சியர் மருதுபாண்டியன், நகராட்சி ஆணையர் ஜான்சன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News