செய்திகள்
குத்தாலம் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த கணவன் பலி
குத்தாலம் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த கணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே மேலையூர் புலியடித்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (32). லாரி டிரைவர். இவருக்கும் அருளரசி (28) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த குருமூர்த்தி, அருளரசி இருவரும் விஷம் குடித்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு இருவரையும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குருமூர்த்தி இறந்தார். அருளரசி சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.