செய்திகள்
சிவகங்கை அருகே விவசாயி வீட்டில் புகுந்து நகை - செல்போன் கொள்ளை
விவசாயி வீட்டில் நகை, செல்போனை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள கொழுக்கட்டைபட்டியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 60), விவசாயி. இவரது மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சந்திரன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 9 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
வீடு திரும்பிய சந்திரன் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.