செய்திகள்

காரைக்குடியில் எண்ணெய் வியாபாரி தற்கொலை

Published On 2017-10-21 21:33 IST   |   Update On 2017-10-21 21:33:00 IST
பிரசவத்தின் போது மனைவியும் குழந்தையும் இறந்து விட்டதால் மனம் உடைந்த நிலையில் இருந்த எண்ணெய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி:

காரைக்குடி மேல ஊருணி வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50). எண்ணெய் வியாபாரி. இவரது மனைவி காமாட்சி. திருமணம் முடிந்து 18 வருடங்களுக்குப் பிறகு காமாட்சி கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பிரசவத்தின் போது காமாட்சியும், அவரது குழந்தையும் இறந்து விட்டார்களாம்.

அன்று முதல் மனம் உடைந்த நிலையில் தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேஷ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News