செய்திகள்

சிவகங்கையில் பேரிடர் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் லதா தொடங்கி வைத்தார்

Published On 2017-10-15 20:05 IST   |   Update On 2017-10-15 20:05:00 IST
சிவகங்கையில் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் சர்வதேச பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் லதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சிவகங்கை:

சிவகங்கை அரண்மனை வாசலில் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் சர்வதேச பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் லதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணி அரண்மனை வாசலிருந்து தொடங்கி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தடைந்தது. பேரணியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

நிலநடுக்கத்தின்போது மேஜை, நாற்காலிக்கு கீழ் சென்று தரையோட தரையாக அமர்ந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். புயல் எச்சரிக்கை கிடைத்தவுடன் ஈரப்பதமில்லா உணவு, குடிநீர் மற்றும் எரிபொருட்களைப் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மின் பாதுகாப்பு மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். வெள்ள அபாயம் முன்னெச்சரிக்கை கிடைத்தவுடன் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர்.

மேலும், கலெக்டர் அலுவலக மைதானத்தில் தீயணைப்புத் துறையின் சார்பில் பேரிடர் வரும் காலங்களில் பாதுகாத்துக் கொள்ள செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News