செய்திகள்

திருப்புவனம்: கீழடியில் பணிகள் நிறுத்தியதை கண்டித்து அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2017-10-14 16:40 GMT   |   Update On 2017-10-14 16:40 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி பள்ளங்கள் மூடப்பட்டதைக் கண்டித்து திருப்புவனத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மானாமதுரை:

“ கீழடியில் 2500 ஆம் ஆண்டு பழமைவாய்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்மக்களின் தொன்மை வாய்ந்த வரலாற்றை, நாகரிகத்தை இழுத்து மூடும் ஏற்பாடாக, ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டன.தொல் பொருள் அகழ்வாராய்ச்சி மைய அலுவலகத்தை காலி செய்து விட்டனர்.

அகழ்வராய்ச்சி பள்ளங்கள் மூடப்படுவதற்கு எதிப்பு தெரிவித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் சுந்தர மகாலிங்கம் முன்னிலையில் திருப்புவனத்தில் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், த.மா.க. வட்டாரத் தலைவர் ராஜா, தே.மு.தி.க. சேகர், விடுதலை சிறுத்தைகள் கண்ணன், மாங்குடிமணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர செயலாளர் நாகூர்கனி, சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி, நகர செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் கந்தசாமி பேசும்போது “கீழடி தமிழர்களின் வரலாற்று பட்டயம். இதை வைத்து தமிழன் மூத்த குடிமக்கள் என்பதை நிரூபித்துக்காட்டுவதற்கு ஏதுவாக அமைந்து விடும் என்று பா.ஜ.க. பயப்படுகிறது. 4-ம் கட்ட ஆய்வு பணி வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் தமிழக அரசு உடனடியாக ஆய்வை தொடங்க வேண்டும். கீழடியில் கண்டெடுக் கப்பட்ட பொருட்கள் கீழடியி லேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேலும் ஆய்வுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News