செய்திகள்

சிவகங்கை அருகே விடுதியில் தங்கியிருந்த 2 மாணவிகள் மாயம்

Published On 2017-10-05 21:06 IST   |   Update On 2017-10-05 21:06:00 IST
சிவகங்கை அருகே விடுதியில் தங்கியிருந்த 2 மாணவிகள் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:

சிவகங்கை தாலுகா மதகுபட்டி அருகே உள்ள பெருங்குடியில் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு மானாமதுரையை சேர்ந்த முருகேசன் மகள் விமலா (வயது 18), சிவகங்கை தாலுகா மாத்தூரை சேர்ந்த பிச்சை மணி மகள் லாவண்யா (17) ஆகியோர் தங்கி அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் ஊருக்கு செல்வதாக விடுதியில் கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் மாயமானார்கள்.

இதனால் பதட்டமடைந்த மாணவிகளின் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தொண்டு நிறுவன இயக்குநர் ஜீவானந்தம் மதகுபட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிவு செய்து 2 மாணவிகளை தேடி வருகிறார்.

Similar News