செய்திகள்

துபாயில் இருந்து வந்த சென்னை விமானத்தில் புகை பிடித்தவர் கைது

Published On 2017-08-03 09:54 IST   |   Update On 2017-08-03 09:54:00 IST
துபாயில் இருந்து வந்த சென்னை விமானத்தில் புகை பிடித்தது தொடர்பாக மதுரையை சேர்ந்த முகமது இப்திகார் என்பரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

தோகாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் மதுரையை சேர்ந்த முகமது இப்திகார் பயணம் செய்தார். இவர் துபாயில் கடந்த 4 ஆண்டுகளாக டிரைவர் வேலை பார்த்தார். சொந்த ஊருக்கு வருவதற்காக துபாயில் இருந்து விமானத்தில் பயணம் செய்தார்.

இரவு பயணிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது முகமது இப்திகார் எழுந்து கழவறைக்கு சென்று சிகரெட் புகைத்தார். இதனால் அபாய சிக்னல் காட்டியது. உடனே கழிவறையில் புகை வருவதை பார்த்த விமான ஊழியர்கள் முகமது இப்திகாரிடம், விமானத்தில் புகை பிடிக்க கூடாது என்று கூறினர்.

ஆனால் அவர் விமான ஊழியர்களிடம் தான் புகை பிடிக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நள்ளிரவு விமானம் சென்னையில் தரையிறங்கியதும், விமான நிலைய போலீசில் ஊழியர்கள் புகார் செய்தனர்.

இதையடுத்து முகமது இப்திகாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அவர் மீது விமானத்தில் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News