செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 10 பேர் கைது

Published On 2017-08-02 14:30 IST   |   Update On 2017-08-02 14:30:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (26). ரவுடியான இவர் மீது நம்பேடு போலீசில் இரட்டை கொலை வழக்கு உள்ளது. இவர் கம்பெனிகளில் மீதமாகும் பழைய உணவை காண்டிராக்டர் எடுத்து அவற்றை பன்றி வளர்ப்பவர்களுக்கு விற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே தில்லைபாக்கத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரமேசிடம் வேலை பார்த்த ராஜூ கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த சரத்குமார், சாந்த குமார், திருநாவுக்கரசு, தாஸ், விஜயகாந்த், ரகுபதி, வினோத், காத்தவராயன், தொடுகாடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஆகிய 10 பேரை கைது செய்தார். தொழில் போட்டி காரணமாக ரமேசை கொலை செய்ததாக இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Similar News