செய்திகள்
கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறில் 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்
கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களை பராமரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
இதையொட்டி இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் கீழ்வேளுர், கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஆகிய ஒன்றியப் பகுதிகளில் நாளை முதல் 29-ந் தேதி வரை முடிய 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.