செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மீது எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு :
எடப்பாடி கே.பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் முதல்-அமைச்சராக ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களில் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் கசிந்தன.
கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி படித்த கல்லூரியில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அவர் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணியம், ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
ஆனால் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலந்து கொள்ளவில்லை. அந்த விழா நடந்த அதே நேரத்தில் அவர் பெருந்துறையில் வேறு ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, எனக்கு தொகுதி மக்கள்தான் முக்கியம். முதல்-அமைச்சர் அரசு விழாவுக்காக வரவில்லை. தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளும்போது எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை என்று பேசினார்.
இது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது அவர் அதிருப்தியில் இருப்பதை காட்டியது.
ஆனால் இதுபற்றி வெளிப்படையாக எந்த தகவல்களும் வரவில்லை.
இந்த நிலையில் நேற்று சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று கூடி தனியாக ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில் கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. ஒருவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பு ஏற்று 3 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை முதல்-அமைச்சர் எம்.எல்.ஏ.க்களை அழைத்து கூட்டம் நடத்தவில்லை. உங்கள் தொகுதியின் பிரச்சினை என்ன என்றும் கேட்கவில்லை. இது எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் உடனடியாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து கருத்துகள் கேட்க வேண்டும். அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களிடம் பேசாத அவர் சில அமைச்சர்களை மட்டும் அழைத்து பேசி, ஏதாவது திட்டங்களை அறிவிக்கிறார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாமா? கட்சியும், ஆட்சியும் இப்போது எந்த பாதையை நோக்கி செல்கிறது என்பதே தெரியவில்லை.
அம்மா இருந்திருந்தால் இந்த நேரம் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து இருப்பார். மக்களிடம் அதிருப்தி வராத வகையில் பொறுப்புகளை மாற்றி கொடுப்பார். அது தொண்டர்களையும், அரசு நிர்வாகத்தையும் சமநிலைப்படுத்துவதாக இருக்கும். அப்படிப்பட்ட நிலை இப்போது இல்லை. எங்கள் கோரிக்கை எல்லாம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி கோரிக்கையை முதல்-அமைச்சர் கேட்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் நடவடிக்கைகளில் எங்களுக்கு திருப்தி இல்லை. இது பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் மனதில் இருக்கும் குறையாகும். எனவே இந்த மனநிலையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் விரைவில் ஒன்றிணைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சருக்கு அதிருப்தி தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் நடத்திய கூட்டம் அ.தி.மு.க.வில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.