கடம்பூர் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
டி.என்.பாளையம்:
கடம்பூரை அடுத்த கோட்ட மாளம் குளத்து பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 24). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் அது முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன் சீட்டு பணம் ரூ.2 லட்சம் எடுத்தார். அதை அவர் தவற விட்டு விட்டார் என தெரிகிறது. இதனால் ராஜேந்திரன் சில தினங்களாகவே ஒரு வித விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரம் கழித்து வயிறு வலிக்கிறது என்று அக்கம் பக்கத்தினரிடம் தான் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பங்களா புதூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.