செய்திகள்
மதுக்கடைக்கு தீ வைப்பு: வி.சிறுத்தை பிரமுகர் வன்னியரசு உள்பட 23 பேர் சிறையில் அடைப்பு
விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வன்னியரசு தலைமையில் மதுக்கடையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த அன்னை அஞ்சுகம் நகரில் மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தலைமையில் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் மதுக்கடைக்குள் புகுந்து ஊழியர்களை விரட்டினர். மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்தனர். மேலும் மதுக்கடைக்கும் தீவைத்தனர்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, தாம்பரம் தொகுதி செயலாளர் ரஞ்சன், தொகுதி துணைச் செயலாளர் ஆதிசாலமன், முன்னாள் நகர செயலாளர் சாமுவேல் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அனைவர் மீதும் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.