செய்திகள்
கத்தாரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் தங்க பிஸ்கட் கடத்தல் - ஆந்திராவை சேர்ந்தவர் கைது
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் கத்தாரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:
கத்தாரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திராவை சேர்ந்த அகமது பாட்ஷா முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது பையில் சோதனை செய்தபோது எமர்ஜென்சி லைட் இருந்தது. அதை உடைத்தபோது 1 கிலோ எடையுள்ள 11 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.
இதையடுத்து அகமது பாட்ஷாவை கைது செய்து விசாரிக்கிறார்கள்.