வேதாரண்யத்தில் மின்னல் தாக்கி மீனவர் பலி
வேதாரண்யம், மே. 10-
வேதாரண்யத்தில் மின்னல் தாக்கி மீனவர் பலியானார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி ஆறுகாட்டுத்துறை பகுதியில் நேற்று பலத்த மின்னலுடன் லேசான மழை பெய்தது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மீனவர் முருகன் (38) தனது படகை கடற்கரையில் ஓரமாக நிறுத்த சென்றார். அவரை மின்னல் தாக்கியது. அவர் படகில் இறந்தார்.
வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தினர் முருகன் உடலை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கி பலியான முருகனுக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
தஞ்சை மற்றும் சுற்றுப் புற பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு மழை பெய்தது. தஞ்சை அருகே உள்ள பூதலூர், செங்கிப்பட்டி பகுதியிலும் மழை பெய்தது.இதனால் பூதலூர் கீழ் பாலம், நடுத்தெருவில் தண்ணீர் தேங்கி நின்றது.இதே போல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்திலும் மழை பெய்தது.
இந்த மழை அக்னி நட்சத்திர வெயிலில் தவித்த மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது.