செய்திகள்

திருப்புவனம் அருகே தனியார் பள்ளியில் ரூ. 11 லட்சம் மோசடி: தலைமை ஆசிரியைக்கு வலைவீச்சு

Published On 2017-05-09 16:30 IST   |   Update On 2017-05-09 16:31:00 IST
திருப்புவனம் அருகே தனியார் பள்ளியில் ரூ. 11 லட்சம் மோசடி செய்த தலைமை ஆசிரியை, அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பாட்டம் கிராமத்தில் தனியார் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் மேலாளர் சம்சுதீன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் மனு கொடுத்தார்.

அதில் எங்கள் பள்ளியில் 2015-2016-ம் கல்வியாண்டில் மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் ரூ.11 லட்சத்தை பள்ளியின் தலைமை ஆசிரியை மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த ஜெயகிறிஸ்டி, அவரது கணவர் சுரேஷ்குமார் ஆகியோர் பள்ளியின் வங்கி கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். பணத்தை கேட்டபோது தர மறுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி குறறப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து ரூ. 11 லட்சம் மோசடி செய்த தலைமை ஆசிரியை மற்றும் அவரது கணவரை தேடி வருகிறார்.

Similar News