செய்திகள்
கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
திட்டச்சேரி பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திட்டச்சேரி:
தமிழகத்தில் புகையிலை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடைகளில் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவின்படியும், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செந்தில் அறிவுறுத்தலின்பேரிலும், திருமருகல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரசுராமன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ரகுநாதன், யேசுநாதன், மனோகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் திட்டச்சேரி, கட்டுமாவடி, திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதைதொடர்ந்து கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. குறிப்பாக பள்ளிகள் உள்ள பகுதிகளில் பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மீறி விற்பனை செய்பவர்கள் மீது பொதுசுகாதார துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு, அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.