செய்திகள்
வேதாரண்யம் அருகே பட்டதாரி பெண் மாயம்
வேதாரண்யம் அருகே பட்டதாரி பெண் மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் தெற்குகுத்தகை பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சசிலாமேரி (வயது 20) இவர் வேதாரண்யம் தணியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவரது தாய் மஞ்சுளா தன் இன்னொரு மகள் லீனாவை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமணைக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மஞ்சுளாவின் மற்ற மகள்கள் வீட்டிலிருந்த பொழுது சசிலாமேரி வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து தாயார் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டிணம் போலீஸ் சப்- இண்ஸ்பெக்டர் பசுபதி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.