செய்திகள்
சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த அரசூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 67). இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த அவர் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பட்டுப்புடவைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.