செய்திகள்

புதுக்கோட்டையில் கருவூலத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-05-05 19:02 IST   |   Update On 2017-05-05 19:02:00 IST
மாநில கணக்காயர் அலுவலகத்தில் மாவட்டக் கருவூலங்கள் மாதக்கணக்கை முடிப்பதற்கு மாதந்தோறும் 17-ஆம் தேதி என்ற முறையே தொடர வேண்டுமென வலியுறுத்தி கருவூலத்துறை ஊழியர்கள் ஆர்ப்பபாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

மாநில கணக்காயர் அலுவலகத்தில் மாவட்டக் கருவூலங்கள் மாதக்கணக்கை முடிப்பதற்கு மாதந்தோறும் 17-ஆம் தேதி என்ற முறையே தொடர வேண்டுமென வலியுறுத்தி கருவூலத்துறை ஊழியர்கள் புதுக்கோட்டையில் ஆர்ப்பபாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டக் கருவூலங்கள் பிரதி மாதந்தோறும் 17-ஆம் தேதிக்குள் கணக்கு முடித்து மாநில அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், நடப்பு மாதம் முதல் 10-ஆம் தேதிக்குள் கணக்கு முடிக்க வேண்டுமென துறை ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் பற்றாக்குறையால் ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலையில் 10-ஆம் தேதிக்குள் கணக்கை ஒப்படைப்பது சாத்தியமில்லை. எனவே, 17-ஆம் தேதி என்பதே தொடர வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கருவூலத் துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பாபு தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கசாமி மற்றும் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அண்ணாத்துரை, துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

Similar News