செய்திகள்

காவேரி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் தொடக்கம்: அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

Published On 2017-05-03 20:16 IST   |   Update On 2017-05-03 20:16:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை:

உலக தொழிலாளர்கள் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மதியநல்லூர் ஊராட்சிக்குட்ப்பட்ட அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்  கலெக்டர் கணேஷ் தலைமையில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில்  அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துக்கொண்டு கிராம பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து பேசியதாவது:-
 
புதுக்கோட்டை மக்களின் மேல் அக்கறை கொண்டு புதுக்கோட்டை  மாவட்டத்திற்கென ரூ.250 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி  குடிநீர் கிடைத்திடும் நோக்கில் ரூ.340 கோடி மதிப்பீட்டில் காவேரி கூட்டு குடி நீர் திட்டத்தின் கீழ் நிதி ஒதிக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்ததின் அடிப்படையில் இவ்விரு பணிகளும் நிறைவுற்று தமிழ்நாடு முதலைமைச்சரால்  தொடங்கி வைக்கபட உள்ளது என்றார்.

Similar News