செய்திகள்
சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண் டாக்டர்கள்.

சிவகங்கையில் அறுவை சிகிச்சையை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம்

Published On 2017-05-03 16:50 IST   |   Update On 2017-05-03 16:51:00 IST
பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக்கோரி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இன்று டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அரசு டாக்டர்கள் சங்க மாவட்டத்தலைவர் பாப்பையா தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

இதில் 300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை.

முன்னதாக நேற்று சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் அரண்மனை வாசல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி சாலை மறியல் செய்ததாக 120 டாக்டர்களை சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 130 டாக்டர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின்னர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News