செய்திகள்
காளையார்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: பெண் பலி
காளையார்கோவில் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை:
மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடியை சேர்ந்தவர் ரத்தினபாட்சா (வயது53). ரெயில்வே ஊழியரான இவர், தனது மனைவி மெக்தாப் (47), மகள்கள் அப்ரீன் (22), சீரின்சித்தாரா (18), உறவினர் தீர்க்கோல்பானு (43), இவரது மகன் முகமது அஜீத் (16), மகள் சுஷ்மா (15) ஆகிய 7 பேருடன் மினி வேனில் நாகூர் தர்காவுக்கு சென்றார்.
அங்கு பிரார்த்தனை முடித்து நேற்று இரவு ஊருக்கு புறப்பட்டனர். வேனை ரத்தினபாட்சா ஓட்டினார். இன்று அதிகாலை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கீரனூர் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள ஒரு வளைவை கடக்கும்போது வேன் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த மெக்தாப் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வேனுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த மற்ற 6 பேரை அப்பகுதியினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.