செய்திகள்

மாமல்லபுரத்துக்கு புதிய பஸ்நிலையம்: உதவி கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2017-03-25 07:36 GMT   |   Update On 2017-03-25 07:36 GMT
மாமல்லபுரத்துக்கு புதிய பஸ்நிலையம் கட்ட வரைபடம் தயாரித்துள்ளனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் திறந்த வெளியில் இயங்கி வரும் பஸ் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்களும் நீண்ட காலமாக அவதிபட்டு வந்தனர்.

இதனால் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட கருகாத்தம்மன் கோவில் அருகே 6.08 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் 25 ஆண்டுகளாக இழு பறியில் கிடப்பில் கிடந்த நிலையில் தற்போது மத்திய பொதுப்பணித்துறையினர் கோயம்பேடு மாதிரியான கலை நயத்துடன் பிரமாண்டமான இரண்டு அடுக்கு பஸ் நிலையம் கட்ட வரைபடம் தயாரித்துள்ளனர்.

கட்டபோகும் இடத்தை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினார். 25 ஆண்டு கால புதிய பஸ் நிலைய கனவு நினைவாக போவதால் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News