செய்திகள்

நீட் தேர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கனிமொழி

Published On 2017-03-25 07:24 IST   |   Update On 2017-03-25 07:24:00 IST
நீட் தேர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வுகளை முடிக்கும் தருவாயில் உள்ள நிலையில் ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதால் பெரும் அளவில் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


மீத்தேன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என மத்்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையை தி.மு.க. கையில் எடுக்கும். தமிழக அரசும் இந்த திட்டத்தை அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News