செய்திகள்

அரசு பஸ் மோதி கொத்தனார் பலி: டிரைவர் கைது

Published On 2017-03-24 15:50 IST   |   Update On 2017-03-24 15:50:00 IST
அரசு பஸ் மோதி கொத்தனார் பலியான இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர்:

திருவாரூர் குடவாசல் வடவேடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). சென்னையில் தங்கியிருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பினார். தரமணி 100 அடி சாலை பாரதி நகர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மாநகர பஸ் அவர் மீது மோதியது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் சரவணனை கைது செய்தனர். இவர் வந்தவாசி வடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்.

Similar News