செய்திகள்

குன்றத்தூரில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

Published On 2017-03-24 15:37 IST   |   Update On 2017-03-24 15:37:00 IST
குன்றத்தூரில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் துரைமுருகன், ஜெகத்ரட்சகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி காஞ்சி வடக்கு மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக பொதுக்கூட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குன்றத்தூர் பெரிய தெருவில் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் செய்து வருகிறார். கூட்டத்தில் கழக முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றுகிறார்கள்.

இதில் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளர் படப்பை ஆ.மனோகரன், பேரூர் கழக செயலாளர் கே.கே.ராசமாணிக்கம், மாவட்ட பிரதிநிதி சத்தியமூர்த்தி, மாங்காடு செயலாளர் பட்டூர் ஜவருல்லா வரவேற்று பேசுகிறார்கள்.

குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க.-பேரூர் தி.மு.க. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

Similar News