செய்திகள்
மணல் கடத்திய வாலிபருக்கு 10 நாட்கள் கருவேல மரங்களை அகற்ற நிபந்தனை ஜாமீன்
மணல் கடத்திய வாலிபர் 10 நாட்கள் காஞ்சீபுரம் வருவாய் ஆய்வாளரிடம் ஆஜராகி, சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறி நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக பெரிய காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர். அப்போது சிலம்பரசன் தரப்பில் ஆஜரான வக்கீல் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மீனாட்சி மணல் கடத்திய சிலம்பரசன் 10 நாட்கள் காஞ்சீபுரம் வருவாய் ஆய்வாளரிடம் ஆஜராகி அவருடன் சென்று சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.