செய்திகள்
ஆலப்பாக்கம் குட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் 3 பெரிய முதலைகள்
ஆலப்பாக்கம் குட்டையில் தண்ணீர் அதிகம் இருப்பதால் பொதுமக்களை அச்சுறுத்தும் 3 பெரிய முதலைகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம்:
பீர்க்கன்கரணையை அடுத்த ஆலப்பாக்கத்தில் சிறிய தண்ணீர் குட்டை உள்ளது. இதனை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த வாரம் குட்டையின் கரையோரத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள முதலைகள் இருந்தது. பொது மக்கள் நடமாட்டத்தை கண்டதும் மீண்டும் அந்த முதலைகள் குட்டைக்குள் சென்று விட்டன.
குட்டையில் முதலைகள் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் குட்டையில் மீன் பிடிக்கவும், பொதுமக்கள் துணி துவைக்கவும் சென்று வந்தனர். முதலை பீதியால் தற்போது பொது மக்கள் அந்த குட்டைக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.
குட்டையில் சுமார் 5 அடி நீளமுள்ள 3 முதலைகள் கிடப்பதாக தெரிகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த முதலைகளை வனத்துறையினரும், வண்டலூர் பூங்கா அதிகாரிகளும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து தாம்பரம் வனத்துறையினரிடம் கேட்டபோது கூறியதாவது:-
ஆலப்பாக்கம் குட்டையில் முதலைகள் கிடப்பது குறித்து பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது குட்டையில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் முதலைகளை பிடிப்பதில் கஷ்டம்.
மேலும் குட்டையை சுற்றி அதிகளவு புதர்கள் உள்ளன. எனவே வலைவீசி முதலைகளை பிடிக்க முடியாது. குட்டையில் ஓரளவு தண்ணீர் வற்றியதும் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வண்டலூர் பூங்காவையொட்டி ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், சாதனந்தபுரம் பகுதிகள் உள்ளது. இங்குள்ள ஏரிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலைகள் சிக்கி இருக்கிறது.
பூங்காவில் பராமரிக்கப்படும் முதலை குட்டிகளை சில நேரங்களில் பறவைகள் இரைக்காக தூக்கிச் செல்வது வழக்கம். அவ்வாறு தூக்கிச் செல்லப்படும் முதலை குட்டிகள் சில நேரங்களில் தப்பி அருகில் உள்ள நீர் நிலைகளில் விழுந்து விடுகின்றன. அவையே தற்போது பெரிய அளவில் வளர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
முதலை குட்டிகளை பறவைகள் தூக்கிச் செல்வதை தடுக்க வண்டலூர் பூங்காவில் குட்டைகளை சுற்றி வலைகள் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.