செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு காஞ்சீபுரம் மாணவர்கள் எதிர்ப்பு

Published On 2017-02-26 22:32 IST   |   Update On 2017-02-26 22:32:00 IST
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு காஞ்சீபுரம் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பல்வேறு  அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

காஞ்சீபுரத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி  உள்ளது.  காஞ்சீபுரம் பஸ் நிலையம் எதிரே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News