செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்ட குறை கேட்கும் கூட்டம் 11-ந்தேதி நடக்கிறது

Published On 2017-02-08 17:11 IST   |   Update On 2017-02-08 17:11:00 IST
பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான “பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம்” அரியலூர் மாவட்டத்தில் 11.02.2017 அன்று சனிக்கிழமை நடக்கிறது.
அரியலூர்:

பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான “பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம்” அரியலூர் மாவட்டத்தில் 11.02.2017 அன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.

அரியலூர் வட்டத்தில் பொட்டவெளி கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் ஓலையூர் கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் ஆனந்தவாடி கிராமத்திலும் நடைபெறவுள்ளது.

அரியலூர் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், உடையார்பாளையம் வட்டத்திற்கு அரியலூர் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளரும், செந்துறை வட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரும், மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட கூட்டத்தினை வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில் கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

எனவே பொதுமக்கள் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News